ஜப்பானின் அணுசக்தி கழிவை பசிபிக் கடலில் கலக்க சீனா எதிர்ப்பு

சீனா: எதிர்ப்பு தெரிவித்துள்ளது... ஜப்பானில் சுனாமியால் சிதைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து அணுசக்திக் கழிவை பசிபிக் கடலில் கலப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பகம், பசிபிக் பெருங்கடலில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்ற ஜப்பானுக்கு அனுமதி அளித்தது.

இத்தகைய திட்டங்கள் பாதுகாப்பானவை என சர்வதேச அணுசக்தி முகமையும் தெரிவித்திருந்தது.

எனினும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ள சீனா, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பகத்தின் அறிக்கையை கடலில் அணுசக்தி கழிவை வெளியேற்ற அனுமதிசீட்டாக பயன்படுத்தக்கூடாது என சாடியுள்ளது.