உத்தரப் பிரதேசத்தில் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி விடுமுறை .. இது தான் காரணம்

உத்தரப் பிரதேசம் : வருகிற நவம்பர் 28 ஆம் தேதி விடுமுறை ...... சீக்கிய மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்பதாம் நானக் குருவான குரு தேக் பகதூர் அவர்களின் ஷஹீதி திவாஸ் தினம் உத்திர பிரதேசம் மாநிலம் முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு குரு தேக் பகதூர் ஷஹீதி திவாஸ் தினம் நவம்பர் 28 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் என்பவரின் ஆன்மா, இவர்மீது இருந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கியர்களின் புனித நூலில், இவரது 115 கவிதை நடையிலான பாசுரங்கள் இடம் பெற்றுள்ளது. சீக்கிய குருவான குரு தேக் பகதூர், 1621 இல் அமிர்தசரஸில் பிறந்தார் மற்றும் 1675 இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் தியாகியானார்.

இதனை அடுத்து இந்த ஆண்டு இவருடைய 401-வது ஜெயந்தி விழா கொண்டாட இருக்கும் நிலையில் அதற்காக உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களும், அலுவலகங்களுக்கும் வரும் நவம்பர் 28 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.