Advertisement

நாவில் கரையும் கிரீம் சீஸ் கேக் செய்வது எப்படி?

By: Monisha Fri, 04 Sept 2020 11:01:10 AM

நாவில் கரையும் கிரீம் சீஸ் கேக் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நாம் நாவில் கரையும் கிரீம் சீஸ் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்
கிரீம் சீஸ் -250 கிராம்
விப்ட் கிரீம் - 200 மிலலி
பொடித்த சர்க்கரை - 3/4 கப்
பிஸ்கட்-100கிராம்
வெண்ணெய்- 50 கிராம்
நாட்டு சர்க்கரை அல்லது பிளெயின் சர்க்கரை 1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் 2 துளி

cream cheesecake,butter,sugar,vanilla essence,jelly ,கிரீம் சீஸ் கேக்,வெண்ணெய்,சர்க்கரை,வெண்ணிலா எஸ்ஸன்ஸ்,ஜெல்லி

செய்முறை
முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உறுக்கி, பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் மற்றும் பொடியாக நொறுக்கிய பிஸ்கட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும். குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கட் கலவையை பரப்பி வைக்க வேண்டும்.

அந்த பிஸ்கட்டை கரண்டியால் அழுத்த வேண்டும். அதனை பிரிட்ஜ்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும். அரை வெப்பநிலையில் கிரீம் சீஸை வைத்து எடுத்த பின்பு அதனுடன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பவுடர் சுகர் போட்டு ஹேன்ட் மிக்ஸரில் வைத்து பீட் செய்ய வேண்டும். பிறகு விப்பிங் கிரீமை ஒரு பவுலில் போட்டு 2 நிமிடம் பீட் செய்ய வேண்டும்.

விப்பிங் கிரீமையும், சீஸ் கிரீம் கலவையையும் ஒன்றாக மிருதுவாக பிரட்ட வேண்டும். இதனை பிரிட்ஜில் வைத்து இருக்கும் பிஸ்கட்டின் மேல் போட்டு பரப்ப வேண்டும். இதனை இரவு முழுவதும் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால், அட்டகாசமான சுவையில் சீஸ் கேக் ரெடியாகி விடும். உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லியோ அதன் மேல் வைத்து சாப்பிடலாம். பழமோ,ஜெல்லியோ வைப்பதாக இருந்தால் சீஸ் கிரீம் செட் ஆன பின்பு தான் வைக்க வேண்டும்.

Tags :
|
|