Advertisement

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பாசிப்பயறு இனிப்பு சுண்டல்

By: Nagaraj Mon, 27 June 2022 5:51:39 PM

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பாசிப்பயறு இனிப்பு சுண்டல்

சென்னை: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பாசிப்பயறு இனிப்பு சுண்டல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருள்கள் –


பாசிப்பயறு - 100 கிராம்
அச்சு வெல்லம் - 50 கிராம்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை

mustard,sweet,cardamom powder,jaggery,tofu ,பாசிப்பயறு, இனிப்பு, ஏலக்காய் தூள், வெல்லம், சுண்டல்

செய்முறை: பாசிப்பயறை நன்றாக கழுவி விட்டு பயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அடுப்பை மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து தனியே வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் பாசிப்பயறு வேக வைத்த தண்ணீர் (50 மில்லி) சேர்த்து அடுப்பில் வைக்கவும். அச்சுவெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரைப் பாகை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பயறு, உப்பு இரண்டயும் சேர்க்கவும். பாகு கெட்டியாகி வரும் போது ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பாசிப்பயறு இனிப்பு சுண்டல் ரெடி.

Tags :
|