Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லெட் சாண்ட்விச்

By: Nagaraj Fri, 07 Oct 2022 8:05:49 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லெட் சாண்ட்விச்

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச். இதன் செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள்:பிரெட் - 6 துண்டுகள்டார்க் சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவுவெண்ணெய் - தேவையான அளவு

kids,chocolate,sandwich,toast butter ,குழந்தைகள், சாக்லெட், சாண்ட்விச், டோஸ்ட் வெண்ணெய்

செய்முறை:டார்க் சாக்லேட் துண்டுகளை துருவிக்கொள்ளவும். பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.
பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துருவலை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும். இதேப் போன்று மற்ற 3 பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, கரண்டியால் லேசாக அழுத்திவிட வேண்டும். பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்தால் தான் உள்ளே இருக்கும் சாக்லேட் உருகி பிரெட் முழுவதும் படரும். இதேப் போல் மீதமுள்ள சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

Tags :
|