Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையான தேங்காய் லட்டு செய்முறை

By: Nagaraj Sun, 07 May 2023 12:32:43 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையான தேங்காய் லட்டு செய்முறை

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையான தேங்காய் லட்டு செய்து கொடுங்கள் விடுமுறை நாளான இப்பொழுது வெளியில் சென்று வெயிலில் விளையாடாமல் உங்களையே சுற்றி வருவார்கள்.

தேவை :
பசும் பால் - 1/4 கப்மில்க் பவுடர் - 2 கப்சர்க்கரை - 1/4 கப்ட்ரை தேங்காய் பொடி - 1/2 கப்முந்திரி, ஏலக்காய் தூள் - தேவையான அளவுநெய் - 2 ஸ்பூன்.

sweet,latte,coconut,cashew,cardamom powder,kids ,இனிப்பு, லட்டு, தேங்காய், முந்திரி, ஏலக்காய் தூள், குழந்தைகள்

செய்முறை: கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதே கடாயில் பசும் பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, மில்க்பவுடர் சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவும்.

வறுத்த முந்திரி மற்றும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும். நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் சுவையான தேங்காய் லட்டு ரெடி.

பண்டிகை காலங்கள் என வந்துவிட்டால் முன்பெல்லாம் வீடுகளில் நாம் குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த பண்டிகை நாட்களில் நமக்கு பிடித்த இனிப்பு மற்றும் கார பலகாரங்களை செய்து இனிப்பு சாப்பிட்டு அந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம்.

Tags :
|
|
|