Advertisement

ருசியில் பிரமாதப்படுத்தும் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு

By: Nagaraj Fri, 19 Aug 2022 4:01:01 PM

ருசியில் பிரமாதப்படுத்தும் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு

சென்னை: ருசியில் பிரமாதப்படுத்தும் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். காய்கறி சுருக்கமான சமயத்தில் சுவையான குழம்பு வகை செய்ய எண்ணினால் இதை செய்யலாம். அதிக சிரமம் தேவையில்லை, உடன் காய் செய்யாமலே!!! சுட்ட அப்பளம் சுவை கூட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தட்டை பயறு வைத்தே சாப்பிடலாம், பருப்பு துவையலோ, தக்காளி பச்சடியோ செய்து சுலபமாக பரிமாறலாம். இதில் சேர்க்கும் தட்டிய பூண்டு, சோம்பு, சீரகம் இவை அனைத்தும் வாய்வுத் தொல்லை குறைக்கும் குணமுடையது.
தேவையான பொருட்கள்:
தட்டை பயறு-1/2 கோப்பைகத்திரிக்காய் 2 அல்லது 3தக்காளி-1வெங்காயம்-1உப்பு-1 தேக்கரண்டிமஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டிபுளி கரைத்த சாறு-2 மேஜைக்கரண்டி (சிறி எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்)சாம்பார் மிளகாய் பொடி-2 தேக்கரண்டி (மசாலா அரைத்தும் செய்யலாம்.)
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி சோம்பு-1/2சீரகம்-1/4கறிவேப்பிலை- சிறிதளவுபூண்டு- 3 பல், கடைசியாக சேர்க்கவும்

anise,cumin,chili,jasmine,coconut,plantain ,சோம்பு, சீரகம், மிளகாய், மல்லிவிதை, தேங்காய், தட்டைப்பயறு

செய்முறை:தட்டை பயறை வாணலியில் சிறிது வறுத்து பின் சிறிது மலர வேக வைத்துக்கொள்ளவும். (3/4 பதம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்) வெந்ததும், உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்ததும் தாளிப்பு செய்யவும், வெங்காயம், கறிவேப்பிலை, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி, சேர்த்து வதக்கவும். தாளித்து, குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் இளந்தீயில் கொதிக்க விடவும். நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். தட்டை பயறு குழம்பு ரெடி.

குறிப்பு:அரைக்க-சோம்பு-1/4 தேக்கரண்டிசீரகம் -1/4 தேக்கரண்டி, மிளகாய்-5மல்லி விதை -1 மேஜைக்கரண்டிதேங்காய் -1 மேஜைக்கரண்டிசிறு துண்டு இஞ்சி நல்ல விழுதாக அரைத்து வெந்த பயறு சேர்த்து கொதிக்க விடவும்.

Tags :
|
|
|