Advertisement

வித்தியாசமான சுவையில் இளந்தேங்காய் குழம்பு செய்முறை

By: Nagaraj Wed, 06 July 2022 3:27:17 PM

வித்தியாசமான சுவையில் இளந்தேங்காய் குழம்பு செய்முறை

சென்னை: இது என்ன புதுசா இருக்கே என்று நினைக்க வேண்டாம். செய்து பாருங்கள். வித்தியாசமான இளந்தேங்காய் குழம்பு இனி உங்கள் வீட்டு சமையலில் அடிக்கடி இடம் பிடித்து விடும்.
தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், முற்றாத இளம் தேங்காய் - ஒரு மூடி, நன்குபழுத்த தக்காளி - 4, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியா தூள்- ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு- அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.

tomato,young coconut,tamarind,cumin,turmeric powder ,தக்காளி, இளம் தேங்காய், புளி, சீரகம், மஞ்சள் தூள்

செய்முறை: வெங்காயத்தைத் தோலுரித்து, இரண்டாக நறுக்குங்கள். தேங்காயைக் கீறி, பல்லுப்பல்லாக நறுக்கிக் கொள்ளுங்கள். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து பொன்னிறமானதும் வெங்காயத்தைப் போட்டு, அது நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.

அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய்தூள், தனியாதூள், நறுக்கிய தேங்காய், தேவையான உப்பு சேர்த்து சேர்த்து பச்சை வாசனை போகக் கொதித்து,கெட்டியான பிறகு இறக்குங்கள்.குழம்பின் உப்பு, காரம், புளிப்பு ஆகியவை தேங்காயில் சேர்ந்து, தயிர்சாதத்துக்கு தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும்.

Tags :
|
|