Advertisement

காலை டிபனுக்கு வித்தியாசமாக கடலை பருப்பு முட்டை தோசை

By: Nagaraj Mon, 02 Oct 2023 10:35:19 PM

காலை டிபனுக்கு வித்தியாசமாக கடலை பருப்பு முட்டை தோசை

சென்னை: பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பை வைத்து எப்படி முட்டை தோசை செய்வது என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்புபொட்டுக்கடலைமுட்டைவெங்காயம்பச்சை மிளகாய்பச்சை அரிசிஉப்பு

chickpeas,tamarind,green chillies,egg,salt,turmeric powder ,கடலைப்பருப்பு, பச்சரிசி, பச்சை மிளகாய், முட்டை, உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை: முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் அரிசியுடன், பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், முட்டை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், இந்த தோசை மாவு கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

அவ்வளவு தான் அட்டகாசமான கடலை பருப்பு முட்டை தோசை தயார். இதனை காரச் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள்.

Tags :
|
|