Advertisement

அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் உப்பு கறி செய்முறை

By: Nagaraj Mon, 12 Sept 2022 11:00:59 PM

அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் உப்பு கறி செய்முறை

சென்னை: அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் உப்பு கறி மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை

சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

chicken,ginger garlic paste,table spoon,salt,chili powder,garam masala , சிக்கன், இஞ்சி பூண்டு பேஸ்ட், டேபிள் ஸ்பூன், உப்பு,  மிளகாய் தூள்,     கரம் மசாலா

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு நீரில் மஞ்சள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். நீர் சுண்டி சிக்கன் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன்பின் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், ருசியான சிக்கன் உப்பு கறி ரெடி.

Tags :
|