Advertisement

இந்த கார்த்திகை தீபத்தன்று இனிப்பு அப்பம் செய்யுங்கள்

By: vaithegi Sun, 26 Nov 2023 4:08:45 PM

இந்த கார்த்திகை தீபத்தன்று இனிப்பு அப்பம் செய்யுங்கள்


கார்த்திகை தீபத்தன்று செய்யப்படும் இனிப்பு அப்பம் மிகவும் ஸ்பெஷலான ஒன்று தான். அதை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப், வெல்லம் – 1 கப், ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை, உப்பு -1 சிட்டிகை, ஆப்ப சோடா மாவு – 1 சிட்டிகை கோதுமை மாவு – 2 டீஸ்பூன் எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை :

இந்த அப்பம் செய்ய மாவு பச்சரிசியை தான் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் அப்பம் பஞ்சு போல சாப்பிட்டாக இருக்கும். இந்த மாவு பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்த பிறகு 4 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். 4 மணி நேரம் கழித்து மாவை அரைப்பதற்கு முன்பாக வெல்லத்தை தயார் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த மாவை நாம் வெல்லத் தண்ணீர் ஊற்றி தான் அரைக்க வேண்டும். இதற்கு ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து கால் கப் தண்ணீரை ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்துக் ஆற வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.

appam,karthikai ,அப்பம் ,கார்த்திகை

இந்த மாவை அரைக்க தண்ணீருக்கு பதிலாக வெல்லத் தண்ணீரை வடிகட்டி ஊற்றி மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு கொஞ்சம் கூட கொரகொரப்பாக இருக்கக் கூடாது. நல்ல நைசான பதத்திற்கு அரைக்க வேண்டும். அடுத்து அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய் தூள், ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். மாவு அரைத்து போக மீதம் இருக்கும் வெல்ல கரைசலையும் மாவில் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். ஒரு வேளை வெல்லத் தண்ணீர் முழுவதுமாக ஊற்றிய பிறகும் மாவு கெட்டியாக இருந்தால் சாதாரண தண்ணீர் கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளலாம். அப்பத்தை உடனே ஊற்றுவதாக இருந்தால் மட்டும் சமையல் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து ஊற்றுவதாக இருந்தால் மாவை புளிக்க விட்டு அதன் பிறகு அப்பத்தை ஊற்றினால் சமையல் சோடா சேர்க்கத் தேவையில்லை.

அதே போல் எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை தீயை மிதமாக மாற்றிய பிறகு ஒரு கரண்டி மாவை எடுத்து அப்படியே ஊற்றி ஒரு புறம் நன்றாக சிவந்து வந்த பிறகு மறுபடியும் திருப்பி போட்டு எடுங்கள். இப்படி சுட்டால் தான் அப்பம் மேலே நன்றாக சிவந்தும் உள்ளே வெந்தும் கிடைக்கும். இந்த கார்த்திகைக்கு அப்பத்தை இது போல செய்து பாருங்கள்.மிகவும் சுவையாக இருக்கும்.

Tags :
|