Advertisement

இரவு நேர டிபன் அருமையாக அமையணுமா... அவல் தோசை தேங்காய் சட்னி செய்து பாருங்கள்

By: Nagaraj Sat, 05 Aug 2023 12:25:35 PM

இரவு நேர டிபன் அருமையாக அமையணுமா... அவல் தோசை தேங்காய் சட்னி செய்து பாருங்கள்

சென்னை: இரவு நேர டிபனுக்கு அருமையாக அவல் தோசையும் தேங்காய் சட்னியும் செய்து பாருங்கள்.

தேவையானவை: அவல் 200 கிராம், அரிசி 100 கிராம், உப்பு-தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல் சிறிது, மிளகாய் 1.

aval dosa,coconut chutney,green chillies,salt,mustard ,அவல் தோசை, தேங்காய் சட்னி, பச்சை மிளகாய், உப்பு, கடுகு

செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னி: ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.

Tags :
|