Advertisement

இட்லி, தோசைக்கு சரியான சைட் டிஷ் கத்திரிக்காய் கடையல்

By: Nagaraj Fri, 27 Oct 2023 07:10:55 AM

இட்லி, தோசைக்கு சரியான சைட் டிஷ் கத்திரிக்காய் கடையல்

சென்னை: கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
சிறிய கத்திரிக்காய் – 1/4 கிலோவெங்காயம் – 1தக்காளி – 1பச்சை மிளகாய் – 3புளி – பெரிய நெல்லிக்காயளவுஉப்பு – தேவைக்குமஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்கடுகு -1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை -சிறிதுகாய்ந்த மிளகாய் -1

eggplant,onion,tomato,curry leaves,chili ,கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மிளகாய்

செய்முறை: கத்திரிக்காயை பொடியாகவும், வெங்காயம் + தக்காளியும் நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் அனைத்தும் சேர்த்து உப்பை தவிர நீர் ஊற்றி வேகவைக்கவும்.

வெந்ததும் சட்டி அல்லது மிக்ஸியில் வேகவைத்த நீரை வடிகட்டி கடைந்து கொள்ளவும். கெட்டியாக இருந்தால் தேவைக்கு வேகவைத்த நீரை சேர்த்து கலக்கவும். பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் உப்பு சேர்த்து கலந்து இட்லி/தோசையுடன் பரிமாறவும். ருசி பிரமாதமாக இருக்கும்.

Tags :
|
|