Advertisement

புரதச்சத்துக்கள் நிறைந்த சாமை டிலைட் செய்முறை

By: Nagaraj Thu, 15 Sept 2022 10:09:17 AM

புரதச்சத்துக்கள் நிறைந்த சாமை டிலைட் செய்முறை

சென்னை: புரதச்சத்துக்கள் நிறைந்த சாமை டிலைட் செய்முறை உங்களுக்காக. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இது சிறந்த ஒன்றாகும்.

தேவையானவை:

சாமை - 200 கிராம்,
பால் - அரை கப்,
தயிர் - ஒரு கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு மற்றும் பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

மேலே தூவ:


துருவிய மாங்காய்,
கேரட் மற்றும் வெள்ளரி - ஒரு டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

chamomile,papaya powder,milk,mango pulp,curd,butter ,சாமை, பெருங்காயத்தூள், பால், மாங்காய் துருவல், தயிர், வெண்ணெய்

செய்முறை: சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக விட்டு ஆறியதும் தயிர், வெண்ணெய் சேர்க்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பயன்கள்: சாமையில் புரதச்சத்தும் இரும்புச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்துள்ளன. இது உடலை வலுவாக்கி சோர்வற்று உழைப்பதற்கான ஆற்றலைத் தரும்.

Tags :
|
|