Advertisement

தொப்பை குறைய எளிய இயற்கை முறை ஜூஸ்

By: Nagaraj Thu, 01 Sept 2022 9:10:04 PM

தொப்பை குறைய எளிய இயற்கை முறை ஜூஸ்

சென்னை: உடலுக்கு ஊட்டம் அளிக்கும் புதினா வெள்ளரிக்காய் ஜூஸ் செய்து பாருங்கள். தொப்பையும் குறையும். இதன் செய்முறை உங்களுக்காக.
தேவையானவை

புதினா இலைகள் – 15
தண்ணீர் – 2.5 லிட்டர்
துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சங்காய் -1
வெள்ளரிக்காய் -1
எலுமிச்சை – 5

lemon,cucumber,ginger,lime,bell pepper ,எலுமிச்சை, வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சங்காய், தொப்பை

செய்முறை: முதலில் வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து பிறகு மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

Tags :
|
|
|