Advertisement

அருமையான ருசி கொண்ட ஸ்பெஷல் பூசணி அவியல் செய்முறை

By: Nagaraj Thu, 15 Sept 2022 10:08:46 AM

அருமையான ருசி கொண்ட ஸ்பெஷல் பூசணி அவியல் செய்முறை

சென்னை: குழந்தையும், குடும்பத்தினரும் ரசித்து ருசித்து சாப்பிட ஸ்பெஷல் பூசணி அவியல் செய்முறை உங்களுக்காக.

தேவையானவை

வெள்ளைப் பூசணி - ஒரு துண்டு
மஞ்சள் பூசணி - ஒரு துண்டு
கருணைக்கிழங்கு - 100 கிராம்
அவரைக்காய் - 100 கிராம்
கொத்தவரங்காய் - 100 கிராம்
சௌசௌ (கத்திரிக்காய்), கருணைக்கிழங்கு,
வாழைக்காய், கேரட் - தலா ஒன்று
பீன்ஸ் - 10
முருங்கைக்காய் - ஒன்று
மாங்காய் - 100 கிராம்
உரித்த மொச்சைக் கொட்டை, காராமணி,
துவரை (மூன்றும் சேர்த்து) - 200 கிராம்
தயிர் - 200 மில்லி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி + ஒரு டீஸ்பூன்.

அரைக்க:

தேங்காய் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 8
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

pomegranate,coriander,mango,white pumpkin,yellow pumpkin ,அவரைக்காய், கொத்தவரங்காய், மாங்காய், வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி

பக்குவம்: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கருணைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, கேரட், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், மாங்காய், வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, வாழைக்காய், சௌசௌ, முருங்கைக்காய் ஆகியவற்றை ஒரு இன்ச் அளவில் வெட்டி குக்கரில் சேர்த்து, உரித்த மொச்சை, துவரை, காராமணி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும்.

பின்பு அதில் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, தயிரும் ஒரு குழிக்கரண்டி தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்கு கலந்தால், சுவையான அவியல் தயார்.


பயன்கள்: பூசணிக்காயில் உள்ள வைட்டமின் சத்துக்கள் உடலை வலுவாக்கும். மேலும் மஞ்சள் பூசணியிலும் மாங்காயிலும் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து சருமத்தை பொலிவாக்கும். உடல் தசைகளை வலுவாக்கும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீரை கரைக்கும். முருங்கைக்காயின் இரும்புச்சத்து ரத்தத்தைப் பெருக்கும்.

Tags :
|