Advertisement

அதிகளவு சத்துக்கள் நிறைந்த சோயா பீன்ஸ் டோஃபு சாலட்

By: Nagaraj Tue, 06 Sept 2022 10:35:19 AM

அதிகளவு சத்துக்கள் நிறைந்த சோயா பீன்ஸ் டோஃபு சாலட்

சென்னை: சத்தான சாலட்...சோயா பீன்ஸ், டோஃபுவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: முளைவிட்ட சோயா பீன்ஸ் -300 கிராம், கேரட் - 1, முட்டைக்கோஸ் - சிறிய துண்டு, டோஃபு - 200 கிராம், வெங்காயம் - 1, உப்பு, மிளகு தூள் - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி, எள், ரோஸ்ட் செய்தது - 2 தேக்கரண்டி, இனிப்பு சோயா சாஸ்- 1 தேக்கரண்டி. கொத்தமல்லி தழை- சிறிதளவு.

soy beans,salad,pepper powder,carrots,soy sauce ,சோயா பீன்ஸ், சாலட், மிளகு தூள், கேரட், சோயா சாஸ்

செய்முறை: முளைவிட்ட சோயா பீன்ஸை வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, கேரட், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். டோஃபுவை நீவவாக்கில் வெட்டி வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முளைத்த சோயா பீன்ஸ் விதை, கேரட், முட்டைக்கோஸ், டோஃபு, உப்பு, மிளகு தூள், வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். நல்லெண்ணெயால் சீசன் செய்யவும், பின்னர் இனிப்பான சோயா சாஸை சேர்க்கவும்.


எள், கொத்தமல்லி தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும். சத்தான சோயா பீன்ஸ் டோஃபு சாலட் ரெடி.

Tags :
|