Advertisement

சுவையும், ஆரோக்கியமும் கொண்ட தாளகக் குழம்பு செய்முறை

By: Nagaraj Mon, 21 Nov 2022 09:44:16 AM

சுவையும், ஆரோக்கியமும் கொண்ட தாளகக் குழம்பு செய்முறை

சென்னை: இன்னைக்கு வித்தியாசமாக தாளகக் குழம்பு செய்வோம் வாங்க. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதை எப்படி செய்வது. இதோ அதன் செய்முறை.


தேவையானவை:
கொத்தவரங்காய், பீன்ஸ் தலா 10,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
புளி பெரிய நெல்லிக்காய் அளவு
கேரட், சௌசௌ 1, வாழைக்காய் ஒரு சிறிய துண்டு
தக்காளி-2 ,
கடுகு , சீரகம் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,
எள், கடலைப்பருப்பு, அரிசி, உளுத்தம்பருப்பு, தனியா, எண்ணெய், சாம்பார் பொடி தலா
ஒரு டீஸ்பூன், சிவப்பு பரங்கிக்காய் ஒரு துண்டு,
காய்ந்த மிளகாய் 4,
தேங்காய் துருவல் அரை கப்,
பெருங்காயம், உப்பு தேவையான அளவு.

sesame powder,vegetable,mustard,asparagus,rice,gram ,
எள்ளுப்பொடி, காய்கறி, கடுகு, பெருங்காயம், அரிசி, உளுந்து

செய்முறை: தாளகக் குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கும்.


முதலில் வெறும் கடாயில் எள்ளைப் போட்டு வறுத்து அரைக்கவேண்டும் . பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை போட்டு வறுத்துக் கொள்ளவேண்டும்.

பின்பு தேங்காய் துருவலையும், அரிசி மற்றும் உளுத்தம்பருப்பையும் தனித் தனியே வறுக்கவும். அரிசி, தேங்காய் துருவல் நீங்கலாக, மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியை வதக்கி, காய்கறிகளைப் பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

இதில் தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் வறுத்து அரைத்த பொடியைப் போடவும். பின்னர், எள்ளுப்பொடி சேர்த்து, குழம்பு கொதித்ததும், அரிசி மற்றும் உளுந்தை அரைத்து இதனுடன் சேர்க்கவும். தேங்காய் துருவலை வறுத்துப் போட்டு, பெருங்காயம், கடுகு , சீரகம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

Tags :
|