Advertisement

முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு செய்முறை பற்றி உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 10 Mar 2023 11:10:37 PM

முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு செய்முறை பற்றி உங்களுக்காக!!!

சென்னை: உணவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உங்களுக்காக முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு செய்முறை பற்றி...

தேவையானவைகோதுமை – ஒரு கப்நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவுநெய் – சிறிதளவுதேங்காய்த் துருவல் – தேவையான அளவு.

wheat,nutmeg,ghee,pudding,health ,,கோதுமை, நாட்டுச் சர்க்கரை, நெய், புட்டு, ஆரோக்கியம்

செய்முறை: கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி நன்கு காயவிடவும். வெறும் வாணலியில் கோதுமையைச் சிறிது சிறிதாகப் போட்டு, படபடவென வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். அருமையான உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் முளைக்கட்டிய கோதுமை புட்டு தயார்.

Tags :
|
|
|