Advertisement

சுவையான அகத்திக் கீரை பொரியல் செய்வது எப்படி?

By: Monisha Wed, 23 Sept 2020 11:38:18 AM

சுவையான அகத்திக் கீரை பொரியல் செய்வது எப்படி?

பொதுவாக அனைத்து கீரைவகைகளிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இன்று நாம் சுவையான அகத்திக் கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அகத்திக் கீரை - 4 கப்
தேங்காய் எண்ணெய்- 1 மேஜைக்கரண்டி
கடுகு, - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
வெங்காயம் & 1
பூண்டு - 6 பற்கள்
காய்ந்த மிளகாய் & 3
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - (துருவியது)

lettuce,taste,recipe,health,lettuce fry ,கீரை,சுவை,ரெசிபி,ஆரோக்கியம்,கீரை பொரியல்

செய்முறை
அகத்திக் கீரையை எடுத்துக் கொள்ளவும். அதிலுள்ள இலைகளை தனியே எடுத்து நீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், தேவையான பொருட்களான பூண்டு மற்றும் வத்தல் மிளகாயை எடுத்துக்கொள்ளவும். அதை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் உழுத்தம் பருப்பை தாளிக்கவும். அடுத்ததாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கவும்.

பின்பு அரைத்த பூண்டு மற்றும் வத்தல் மிளகாயை சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கவும். பின்பு சுத்தம் செய்த கீரையை சேர்த்துக் கொள்ளவும். நன்கு கிளறவும். கீரை வெந்தவுடன், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.நன்கு கிளறவும். பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும். மறுபடியும்,நன்கு கிளறவும். அகத்திக் கீரை பொரியல் தயார்.

Tags :
|
|
|