Advertisement

இரும்புச்சத்து நிறைந்த தேங்காய் பாலில் அல்வா செய்முறை

By: Nagaraj Fri, 07 Oct 2022 10:30:36 PM

இரும்புச்சத்து நிறைந்த தேங்காய் பாலில் அல்வா செய்முறை

சென்னை: சத்து நிறைந்த தேங்காய் பாலில் அல்வா செய்து சாப்பிட்டு இருக்கீங்களா. தேங்காய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. தேங்காய்ப்பாலில் இரும்பு சத்தும் உள்ளது. சரி இதில் அல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் : தேங்காய் - 1 பெரியது, பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன், நெய் - 2 ஸ்பூன், முந்தரி பருப்பு - 10 கிராம், வெண்ணெய் - 2 ஸ்பூன், ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன், நாட்டு சர்க்கரை - 1 கப்

coconut,bitter rice,ghee,cardamom,sweet potato ,தேங்காய், பச்சரிசி, நெய், ஏலக்காய், நாட்டுச்சர்க்கரை

செய்முறை : பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். தேங்காயை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலை எடுக்கவும்.

ஒரு பத்தை தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும். கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து லேசாக வறுக்கவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் ஒரு கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து ஊற்ற வேண்டும்.


தேங்காய் பால் நன்றாக கிளறி விட்டு அதில் அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை போட்டு கிளற வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்தே செய்ய வேண்டும். தொடர்ந்து இடைவிடாமல் 15 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நல்ல கிளறி விடவும். கட்டியில்லாமல் விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு நன்று சுருண்டு தேங்காய் பால் அல்வா வந்து விடும்.


கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரி பருப்பை போட்டு இறக்கி விடவும். இப்போது சுவையான புதுமையான தேங்காய் பால் அல்வா ரெடி!

Tags :
|