Advertisement

சுவையான இஞ்சி குழம்பு செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்

By: Nagaraj Fri, 08 Sept 2023 7:22:08 PM

சுவையான இஞ்சி குழம்பு செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்

சென்னை: சுவையான இஞ்சி குழம்பை நம்முடைய வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இஞ்சிக்குழம்பை உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

இஞ்சி 200 கிராம்தேங்காய் அரை மூடிபுளி ஒரு நெல்லிக்காய் அளவுபூண்டு 5 பற்கள்வத்தல் மிளகாய் பொடி 1 டேபிள் ஸ்பூன்மல்லி தூள் 2 டேபிள் ஸ்பூன்ஜீரகம் அரை டேபிள் ஸ்பூன்வெந்தய தூள் அரை டேபிள் ஸ்பூன்ஆயில் 3 டேபிள் ஸ்பூன்கடுகு 1 டேபிள் ஸ்பூன்சிவப்பு வத்தல் மிளகு 3கறிவேப்பிலை 3 கொத்துஉப்பு தேவைக்கு

ginger,coconut,tamarind,garlic,broth ,இஞ்சி, தேங்காய், புளி, பூண்டு, குழம்பு

செய்முறை: முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள். இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.

வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சியை சூடு ஆறும் வரை வைத்திருந்து அதன் பின் கூடவே புளி, பூண்டு, வத்தல் மிளகாய் பொடி, மல்லி தூள், ஜீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணையை ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.

தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவை கொதித்ததும் இஞ்சி குழம்பு ரெடி. இஞ்சியை வறுத்து அரைத்து எடுப்பதால் கொதித்தவுடன் இஞ்சி குழம்பு கொதித்தவுடன் ரெடி ஆகி விடும்.

Tags :
|
|