Advertisement

சூப்பராக பால் கொழுக்கட்டை செய்து குடும்பத்தினரை அசத்துங்க

By: Nagaraj Fri, 13 Oct 2023 06:50:38 AM

சூப்பராக பால் கொழுக்கட்டை செய்து குடும்பத்தினரை அசத்துங்க

சென்னை: எளிமையான உணவும், இந்த பொங்கல் பண்டிகையின் போது மாலை நேரத்தில் குடும்பத்தினருக்கு சூப்பராக பால் கொழுக்கட்டை செய்து தந்து அசத்துங்க.

பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது என்பது அடுத்த ஒரு சிறப்பாகும். பால் கொழுக்கட்டை என்பது கொழுக்கட்டையை தண்ணீரில் வேக வைத்து பின் அதில் பால் மற்றும் உருண்டை வெல்லம் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. தேவை எனில் கருப்பட்டி போட்டும் செய்யலாம். பலருக்கு இது பிடிக்காது. அதனால் உருண்டை வெல்லம் சேர்த்தே செய்யலாம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – 400 கிராம், உருண்டை வெல்லம் – 400 கிராம், சுக்கு – 5 கிராம், தேங்காய் (சிறியது) – அரை மூடி, காய்ச்சிய பால் ‍ 1 கப்தண்ணீர் – தேவையான அளவு

tamarind flour,jaggery balls,sugar,coconut,milk ,பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், சுக்கு, தேங்காய், பால்

செய்முறை: முதலில் உருண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சுக்கைத் தட்டி வைத்துக் கொள்ளவும். பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவைப் போல் பெரிய உருண்டையாக திரட்டிக் கொள்ளவும்.

பின் அதிலிருந்து சிறிது மாவினை எடுத்து சிறிய உருண்டையாகவோ அல்லது விரல் வடிவிலோ திரட்டிக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீரினை எடுத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் திரட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை போடவும்.

மீண்டும் தண்ணீர் கொதித்தவுடன் கொழுக்கட்டைகளை கரண்டியை வைத்து கிளறி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கொழுக்கட்டை நிறம் மாறி இருக்கும் போது வெளியே எடுத்து விடவும். மறுபடியும் கொழுக்கட்டைகளை போடுவதாக இருந்தால் ஏற்கனவே கொழுக்கட்டை வேக வைத்த நீரில் சிறிதளவு குளிர்ந்த தண்ணீரைச் சேர்த்து பின் தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.

கொழுக்கட்டை வேக வைத்த நீரில் காய்ச்சிய பால் ‍ 1 கப் மற்றும் தூளாக்கி வைத்துள்ள வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்த உடன் அதனுடன் தட்டி வைத்துள்ள சுக்கு மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்தவுடன் அதனுடன் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் கலவையை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

Tags :
|