Advertisement

உருளை மசாலா குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்

By: Nagaraj Wed, 06 July 2022 3:27:08 PM

உருளை மசாலா குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்

சென்னை: உருளை மசாலா குழம்பு செய்து பார்த்து இருக்கிறீர்களா. குழந்தைகள் கூட அடம் பண்ணாமல் இதன் ருசியில் மயங்கி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, உப்பு -தேவையான அளவு, பச்சைப் பட்டாணி (விருப்பப்பட்டால்) - சிறிதளவு. அரைக்க: இஞ்சி - ஒருதுண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் - அரை டீஸ்பூன்,சோப்பு - அரை டீஸ்பூன். தனியாக அரைக்க: தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - கால் கப், பட்டை - ஒரு துண்டு,கறிவேப்பிலை - சிறிதளவு.

tomato,potato,coconut,peanut,curry leaf ,தக்காளி, உருளைக்கிழங்கு, தேங்காய், பொட்டுக்கடலை, கறிவேப்பிலை

செய்முறை:உருளைக்கிழங்கை தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். பெரியவெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காயைத் தனியாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேருங்கள்.

வெங்காயம் நன்குவதங்கியதும், தக்காளி, உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்குங்கள்.பிறகு, 2 கப் தண்ணீர் சேர்த்து உருளைக் கிழங்கு வேகும் வரை கொதிக்க விடுங்கள். பிறகுஅரைத்த தேங்காய் விழுதை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். கைவிடாமல் கிளறி, 5 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.

Tags :
|
|
|