Advertisement

பலாக்காயில் கோலா உருண்டை செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 07 July 2022 7:48:50 PM

பலாக்காயில் கோலா உருண்டை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: பலாக்காயில் கோலா உருண்டை செய்து இருக்கிறீர்களா. செய்து பாருங்கள். சுவையில் அடிக்கடி செய்வீர்கள். பலாக்காய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தி ஆகிறது. வலிமையை ஏற்படுத்துகிறது. பலாக்காய் கொண்டு பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை:

பலாக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
கசகசா - 50 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
இஞ்சி - 10 கிராம்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - சிறிது அளவு
தேங்காய் பூ - சிறிது அளவு
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப

papaya,onion,garlic,kakakasa,kola ball ,பலாக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, கககசா, கோலா உருண்டை

செய்முறை: பலாக்காயை தண்ணீரில் நன்கு வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். மற்ற எல்லாவற்றையும் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய அனைத்தையும் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.


பிறகு அரைத்த பலாக்காயையும் மற்றும் மேல் சொன்ன அரைத்த கலவையையும் சேர்த்துப் பிசைந்து, இதனுடன் போதிய அளவு உப்பு சேர்த்து, நமக்குத் தேவையான அளவு உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும். இப்போது பலாக்காய் கோலா உருண்டை தயார். இதனுடன் தேங்காய் அல்லது தக்காளிச் சட்னி செய்து உண்டால் இன்னும் ருசியாக இருக்கும்.

Tags :
|
|
|