Advertisement

வித்தியாசமான ருசியில் வாழைக்காய் புட்டு செய்முறை

By: Nagaraj Mon, 27 June 2022 5:51:19 PM

வித்தியாசமான ருசியில் வாழைக்காய் புட்டு செய்முறை

சென்னை: வித்தியாசமான ருசியில் வாழைக்காய் புட்டு செய்து பாருங்கள். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள் -
வாழைக்காய் - 1
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க -

கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/4தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1/2
மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிது
எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

banana pudding,mustard,lentils,caraway,chilli ,
வாழைக்காய் புட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, மிளகாய்

செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் வாழைக்காயைப் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் காயை வெளியில் எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும். அதன்பின் வாழைக்காயை துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.


துருவிய வாழைக்காயில் உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாயை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி அடுப்பை ஆப் செய்யவும். இப்பொது துருவி வைத்திருக்கும் வாழைக்காய் கலவையை சேர்த்து கிளறி விடவும். வாழைக்காய் புட்டு ரெடி. ருசியும் அருமையாக இருக்கும்.

Tags :