Advertisement

காளான் குழம்பு செய்து இருக்கீங்களா... இப்போ செய்வோம் ருசியாக!!!

By: Nagaraj Wed, 08 Nov 2023 3:48:11 PM

காளான் குழம்பு செய்து இருக்கீங்களா... இப்போ செய்வோம் ருசியாக!!!

சென்னை: காளான் குழம்பு செய்து பார்த்து உள்ளீர்களா? இதோ அந்த செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:
காளான் - 300 கிராம்வெங்காயம் - 2தக்காளி - 2மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்சீரகம் - 3/4 ஸ்பூன்சோம்பு - 1/2 ஸ்பூன்பட்டை- 2 இன்ச் துண்டுகிராம்பு - 2ஏலக்காய் - 2காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கு ஏற்பதேங்காய் - கால் மூடிஎண்ணெய் - தேவைக்கு ஏற்பஉப்பு - தேவைக்கு ஏற்பகறிவேப்பிலை, கொத்தமல்லி தழை- சிறிதளவு

mushroom,onion,tomato,turmeric powder ,காளான், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள்

செய்முறை: முதலில் ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சூப்பரான காளான் குழம்பு தயார்.

Tags :
|
|