Advertisement

ரத்த விருத்தி மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் பீட்ரூட் சப்பாத்தி

By: Nagaraj Tue, 20 Dec 2022 10:32:38 PM

ரத்த விருத்தி மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் பீட்ரூட் சப்பாத்தி

சென்னை: ரத்த விருத்தி மற்றும் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பீட்ரூட்டை சேர்த்து சப்பாத்தி செய்யவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்-நெய் கலவை – தேவையான அளவு.

அரைக்க : பீட்ரூட் – 1, சோம்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

beetroot,chapathi,paratha,roti,veg recipe, ,கோதுமை மாவு, பீட்ரூட் சப்பாத்தி

செய்முறை : அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு. நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் மாவை சப்பாத்தியாக திரட்டி வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாற சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார்.

Tags :
|