Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பீட்ரூட் சூப்

By: Nagaraj Sat, 18 Mar 2023 10:54:56 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பீட்ரூட் சூப்

சென்னை: உடல் ஆரோக்கியத்தை உயர்த்துவதில் பீட்ரூட்டிற்கு தனியிடம் உண்டு. அந்த வகையில் பீட்ரூட் சூப் செய்ய சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - கால் கிலோபெரிய வெங்காயம் - ஒன்றுஉருளைக்கிழங்கு - 1எலுமிச்சம்பழம் - பாதிபுதினா - சிறிதளவுசீரகம் - 1/4 டீஸ்பூன்மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பஎண்ணெய் - தேவைக்கேற்ப

 ,பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம், புதினா, உப்பு

செய்முறை: பீட்ரூட் மற்றும் உருளைக் கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெயில் தாளித்து வேக வைத்து கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.

அடுப்பில் கடாயை அரைத்த விழுது, உப்பு, தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கிரீம் புதினா சேர்த்து பருகவும். இப்போது பீட்ரூட் சூப் தயார்

Tags :