Advertisement

அசைவ பிரியர்களுக்கு பிடித்த பெரிபெரி சிக்கன் செய்முறை

By: Nagaraj Sun, 21 Aug 2022 11:12:17 AM

அசைவ பிரியர்களுக்கு பிடித்த பெரிபெரி சிக்கன் செய்முறை

சென்னை: அசைவ பிரியர்களுக்கு பிடித்த பெரி பெரி சிக்கனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோஎண்ணெய் - 1/2 தேக்கரண்டிவெங்காயம் - 1இஞ்சிபூண்டு - 4 பற்கள்சிவப்பு மிளகாய் - 20சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டிஉப்பு - 2 தேக்கரண்டிஆர்கனோ - 2 தேக்கரண்டிமிளகு - 2 தேக்கரண்டிபிரியாணி இலை - 2எலுமிச்சை சாறு - 1 பழம்ஆலிவ் எண்ணெய் - 1/2 கப்கொத்துமல்லி தழை

olive oil,chicken,masala paste,onion,garlic,red chili ,ஆலிவ் எண்ணெய், சிக்கன், மசாலா விழுது, வெங்காயம், பூண்டு, சிவப்பு மிளகாய்

செய்முறை: பெரி பெரி சிக்கன் செய்ய மிஸ்சியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், ஒரு இஞ்சி துண்டு, பழுத்த சிவப்பு மிளகாய், சிறிதளவு சர்க்கரை, தேவையான அளவு உப்பு, ஆர்கனோ, பேப்ரிக்கா பவுடர், பிரியாணி இலை, ஒரு பழத்தின் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அந்த சிக்கன் துண்டுகளை கத்தியை கொண்டு லேசாக கீறிக்கொள்ளவும்.

அரைத்த மசாலா விழுதை இந்த சிக்கன் துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த சிக்கனை தம்மில் வைக்க ஒரு கிண்ணத்தில் சுடப்பட்ட கரித்துண்டை ஒரு கிண்ணத்தில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, புகை நன்கு வந்தவுடன் சிக்கனை மூடி ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு தவாவில் எண்ணெய் தடவி இந்த மசாலாவில் ஊறிய சிக்கனை வைத்து பத்து நிமிடம் வேகவைக்கவும். ஒரு புறம் சிக்கன் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி ஆலிவ் எண்ணையை தடவி மறுபுறமும் பொரிக்கவும். இருபுறமும் வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.

Tags :
|
|