Advertisement

குடும்பத்தினருக்கு நவராத்திரி ஸ்பெஷலாக செய்து கொடுக்க சிறந்த இனிப்பு

By: Nagaraj Sat, 21 Oct 2023 06:34:36 AM

குடும்பத்தினருக்கு நவராத்திரி ஸ்பெஷலாக செய்து கொடுக்க சிறந்த இனிப்பு

சென்னை: நவராத்திரியின் போது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ அருமையான இனிப்பு செய்வதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: முந்திரி பருப்பு – இரண்டு கப், மைதா மாவு – இரண்டு கப், சர்க்கரை – ஆறு கப், தண்ணீர் – அரை கப், நெய் – நான்கு கப்.

cashews,sugar,maida flour,ghee,family ,முந்திரி, சர்க்கரை, மைதா மாவு, நெய்,  குடும்பத்தினர்

செய்முறை: கடாயை சூடு செய்து அதில் முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.

கொதித்த பின் மைதா மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஓட்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறவும். கெட்டியாக வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். அருமையான சுவையில் முந்திரி கேக் ரெடி.

Tags :
|
|