Advertisement

உடல் சோர்வை போக்கு ஆரோக்கியத்தை உயர்த்தும் மருந்து குழம்பு

By: Nagaraj Thu, 16 Nov 2023 10:09:11 PM

உடல் சோர்வை போக்கு ஆரோக்கியத்தை உயர்த்தும் மருந்து குழம்பு

சென்னை: குளிர்காலத்தில் ஏற்படும் பசியின்மை, அஜீரணம் மற்றும் உடல்சோர்வு ஆகியவற்றுக்கு அருமருந்து எதுன்னு தெரியுங்களா. அதுதான் மருந்துக்குழம்பு.

தேவையானவை:மணத்தக்காளி வற்றல் - கால் கப்தோல் உரித்தசின்ன வெங்காயம் - ஒரு கப்பூண்டு - 20 பல்புளி - எலுமிச்சை அளவுசுக்கு - ஒரு அங்குலத்துண்டுமிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்திப்பிலி - 10 குச்சிகள்மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்வெந்தயம் - கால் டீஸ்பூன்கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுவெல்லம் - சிறிய துண்டுகடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்உப்பு - தேவையான அளவு

mustard,urad dal,curry leaves,fenugreek powder,coriander,gourd ,கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மணத்தக்காளி, சுண்டைக்காய்

செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், மல்லி (தனியா), வெந்தயம், பாதி மணத்தக்காளி வற்றல், கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு பிறகு ஒன்று சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மீதமுள்ள மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்ததும் வறுத்து அரைத்த பொடியை, சிறிது நீரில் கலக்கி கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை, ‘சிம்’மில் வைத்து கொதிக்கவிட்டு பிறகு இறக்கிப் பரிமாறவும். இந்தக் குழம்பை 4 நாள்கள் வரை வைத்திருக்கலாம். குளிர்காலத்தில் ஏற்படும் பசியின்மை, அஜீரணம் மற்றும் உடல்சோர்வு ஆகியவற்றுக்கு அருமருந்து. மணத்தக்காளி வற்றலுக்கு பதிலாக சுண்டைக்காய் வற்றலும் உபயோகிக்கலாம்.

Tags :