Advertisement

நான்கு நாட்கள் கெட்டுப்போகாத வகையில் பூண்டி சட்னி செய்முறை

By: Nagaraj Sun, 08 Jan 2023 3:25:28 PM

நான்கு நாட்கள் கெட்டுப்போகாத வகையில்  பூண்டி சட்னி செய்முறை

சென்னை: பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட்டுவார்கள். ருசியாக பூண்டு சட்னி செய்வது குறித்து பார்க்கலாம். இது நெய் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமில்லை இந்த சட்னியை கைப்படாமல் பக்குமாய் செய்தால் 4 நாட்களுக்கு கெட்டு போகாது.
தேவையான பொருட்கள்:
பூண்டு,தக்காளிகாய்ந்த மிளகாய்கறிவேப்பிலைஎண்ணெய்உப்புகடுகு

dry chillies,garlic,tomatoes,curry leaves,mustard ,காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை, கடுகு

செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காரத்திற்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, அதே கடாயில் 1 கப் அளவு பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

இப்போது அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்தது, மிக்ஸியில் வறுத்த காய்ந்த மிளகாய், வதக்கி எடுத்த பூண்டு , தக்காளி சேர்த்து அரைக்க வேண்டும்.

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை அதில் கொட்ட வேண்டும். பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் சட்னியை வதக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வந்த உடனே இறக்கினால் போதும், சுவையான அட்டகாசமான பூண்டு சட்னி தயார்.

Tags :
|