Advertisement

பிரெட் , முட்டை வீட்டில் இருக்க, அப்ப காலை உணவு வரைவில் ரெடி

By: Karunakaran Sun, 31 May 2020 7:25:23 PM

பிரெட் , முட்டை வீட்டில் இருக்க, அப்ப காலை உணவு வரைவில் ரெடி

கொரோனா காலத்தில் நாம் வெளியில் செல்வதே கடினமாக உள்ளது. இந்த நிலையில் காலை உணவை உடனடியாக செய்ய வேண்டுமே என்ற குழப்பமும் அவசர அவசர எண்ணமும் தான் நமக்கு தோன்றும். உடனே நாம் சமையலறைக்கு சென்று பார்த்தால் ஒரு பொருள் கூட இருந்திருக்காது. முட்டை மற்றும் பிரெட்களை வைத்து காலை உணவை சீக்கிரமே செய்து விடலாம். வாங்க அதை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிரெட் - 4
முட்டை - 4
கொத்தமல்லி தேவைக்கேற்ப
வெங்காயம் தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்

எண்ணெய்
மற்றும்
சுவைக்கு ஏற்ப உப்பு

french toast recipe,recipe,recipe in tamil,special recipe ,பிரஞ்சு சிற்றுண்டி, காலை உணவு,சமையல் குறிப்பு, இன்றைய சமையல்,

செய்முறை

முட்டையில் உப்பு, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் அரைத்ததை போட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,

பிறகு பிரெட்களை எடுத்து, தோசைக்கல், அல்லது தவாவில் எடுத்து சற்று சூடேற்றி அந்த முட்டை கலவையை அந்த பிரெட்டில் நனைத்து சிறிது பொன் முறுவலாக ஆகும் வரை வைத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு தக்காளி கெட்செப், தேன் வைத்து சுவையான பிரெஞ்ச் பிரெட்டை குடும்பத்தினருக்கு பரிமாறுங்கள்.

Tags :
|