Advertisement

மறதியை குறைத்து ஆரோக்கியத்தை உயர்த்தும் ப்ரோக்கோலி சூப்

By: Nagaraj Fri, 25 Aug 2023 10:07:25 AM

மறதியை குறைத்து ஆரோக்கியத்தை உயர்த்தும் ப்ரோக்கோலி சூப்

சென்னை: ப்ரோக்கோலியுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும். இது குழந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுங்கள்.

தேவையானவை:
சின்ன சைஸ் புரோகோலி,பொடியாக நறுக்கிய வெங்காயம்,வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1.சோள மாவு – 2 டீஸ்பூன்.பால் – 1 கப்.தண்ணீர் – 2-3 கப்.எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு.

soup,benefits,broccoli,children,brain,increase ,சூப், நன்மைகள், பிரக்கோலி, குழந்தைகள், மூளை, அதிகரிக்கும்

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு வதக்கி பின்பு,புரோகோலியை சுத்தமாக்கிய பின் சிறிதாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும்.

மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும். மிக்ஸியில் புரோகோலி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீர் விட்டு அரைக்க வேண்டும். ஒரு கப்பில் பாலுடன் சோள மாவைக் கலந்து, கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சூடாக இருக்கும் கடாயில், அரைத்த புரோகோலி விழுது மற்றும் பாலில் கரைத்த சோள மாவைக் கலந்து வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து, ஒரு கொதி வந்தபிறகு இறக்க வேண்டும். இந்தச் சூப்பின் மேல் வால்நட் தூவி சாப்பிடலாம். புற்றுநோய்க்கு எதிரான ஊட்டச்சத்து அதிக அளவு உள்ளது.

இதனால் மார்பகம், வயிறு தொடர்பான அனைத்து புற்றுநோய்களையும் உருவாக்கக்கூடிய செல்களை தடுக்கின்றது. வைட்டமின் சியும் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்தும். மறதி நோய் வராமல் தடுக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

Tags :
|
|