Advertisement

ஓட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம் மூட்டை மசாலா

By: Nagaraj Wed, 29 June 2022 11:56:06 PM

ஓட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம் மூட்டை மசாலா

சென்னை: ஓட்டல் சுவையில் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் முட்டை மசாலா.

தேவையான பொருள்கள்:
முட்டை - 2தக்காளி - 1மிளகுத்தூள் - 1 தேக்கரண்டிகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டிதக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவுமல்லித்தழை - சிறிது
தாளிக்க:
எண்ணைய் - 3 மேஜைக்கரண்டிபெரிய வெங்காயம் - 1கறிவேப்பிலை - சிறிது

tomatoes,salt,garam masala powder,pepper,tomato sauce ,தக்காளி, உப்பு, கரம் மசாலா தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ்

செய்முறை: முதலில் முட்டைகளை வேக வைத்து எக் கட்டர் அல்லது கத்தியால் துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு சுருள வதங்கியதும் உப்பு, கரம் மசாலா தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும். பிறகு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மசாலா எல்லா இடத்திலும் படும் படி நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து மல்லித்தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை மசாலா ரெடி.

Tags :
|
|