Advertisement

அசத்தல் சுவையில் பூந்தி தயிர்வடை செய்முறை

By: Nagaraj Thu, 06 Oct 2022 9:58:46 PM

அசத்தல் சுவையில் பூந்தி தயிர்வடை செய்முறை

சென்னை: அசத்தல் சுவையில் பூந்தி தயிர்வடை செய்வோமா. வாங்க செய்முறையை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

உளுத்தம்பருப்பு – 250 கிராம்,
புளிப்பு இல்லாத தயிர் – அரை லிட்டர்,
பச்சை மிளகாய் – 3,
நறுக்கிய கொத்தமல்லி, கேரட் துருவல் – தலா 2 டீஸ்பூன்,
காராபூந்தி – 100 கிராம்,
எண்ணெய் – 500 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

coriander,urad dal,salt,green chillies,bunti ,கொத்தமல்லி, உளுத்தம்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய், பூந்தி

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடிகட்டுங்க. அப்புறமா உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைச்சிக்கோங்க. வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுங்க.

வடைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து, தயிரில் போடுங்க. நன்கு ஊறியதும், மேலே பூந்தி, கேரட் துருவல், கொத்தமல்லி தூவுங்க. அவ்ளோ தான்..பூந்தி தயிர் வடை தயார்.


Tags :
|