Advertisement

சுவாசக் குறைப்பாடுகளை ஒரு கை பார்க்கும் கற்பூரவல்லி தேநீர்

By: Nagaraj Sun, 14 May 2023 9:49:35 PM

சுவாசக் குறைப்பாடுகளை ஒரு கை பார்க்கும்  கற்பூரவல்லி தேநீர்

சென்னை: கற்பூரவல்லி தேநீரின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்., அதில் வெகு முக்கியமான ஒன்று இந்தத் தேநீரானது கடுமையான சளி, தலைவலி, தொண்டை கரகரப்பு, சுவாசக் குறைப்பாடு, என அனைத்தையுமே ஒரு கை பார்த்து விடும்.

தேவையான பொருட்கள்:
கற்பூரவல்லி இலைகள்: 3 அல்லது 4இஞ்சி- ஒரு சிறு துண்டுதேன் அல்லது நாட்டுச் சர்க்கரை- 1 டீ ஸ்பூன்ஏலக்காய்- 1லெமன்- கால்மூடி

immune,mandala,strengthening,camphor,tea ,நோய் எதிர்ப்பு, மண்டலம், வலிமையடையும், கற்பூரவல்லி, தேநீர்

செய்முறை: கற்பூர வல்லி இலைகளை ஒரே சமயத்தில் அதிகம் பயன்படுத்தக் கூடாது. அதில் காட்டம் அதிகம். எனவே எப்போது பயன்படுத்தினாலும் குழந்தைகளுக்கு எனில் 1 அல்லது 2 இலைகள் போதும். பெரியவர்களுக்கு எனில் 3 அல்லது 4 இலைகள்

முதலில் கற்பூர வல்லி இலைகளை நசுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளலாம். இல்லையேல், ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் நசுக்கிய இஞ்சி , நுணுக்கிய ஏலக்காய், மற்றும் கற்பூர வல்லி இலைகளைப் போட்டு தளதளவெனக் கொதிக்க விட்டு பின்பு இலைகளைப் பிழிந்து சாற்றை மட்டும் வைத்துக் கொண்டு வடிகட்டி கொள்ள வேண்டும்.
கடைசியாக கால்மூடி லெமன் பிழிந்து தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து பரிமாறலாம். வாரம் இரண்டு முறை காலை வேளையில் இந்த டீயை அருந்தினால் அடிக்கடி வரக்கூடிய தலைவலி, இருமல், தொண்டைக் கரகரப்பு எல்லாமும் வெகு விரைவில் சரியாகி விடும்.

அது தவிர கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.

Tags :
|