- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- சென்னை ருசியில் மீன் குழம்பு செய்யலாமா... வாங்க செய்து பார்ப்போம்
சென்னை ருசியில் மீன் குழம்பு செய்யலாமா... வாங்க செய்து பார்ப்போம்
By: Nagaraj Wed, 02 Nov 2022 11:38:07 AM
சென்னை: மெட்ராஸ் ஸ்டைலில் மீன் குழம்பு செய்து பாருங்கள். ருசியில் மீண்டும், மீண்டும் செய்து சாப்பிடுவீங்க.
தேவையான பொருட்கள் :
மீன் - 500 கிராம்
வெங்காயம் - 4
கடுகு - 1/2 ஸ்பூன்
கசகசா- 1/2 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
நெய்- 50 மில்லி
புளி கரைத்த நீர்- 150 மில்லி
சீரகம் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
செய்முறை : முதலில் மீனை பக்குவமாகச் சுத்தப்படுத்தித்
துண்டுகளாக்கிக் கழுவிக் கொள்ளவும். கழுவியதைத் தனியே எடுத்து ஓர் அகன்ற
பாத்திரத்தில் வைக்கவும் . அத்துடன் நறுக்கிய வெங்காயத்தையும், புளிகரைத்த
நீரையும் கலந்து கொள்ளவும். பிறகு கடுகு, கசகசா, பூண்டு, சீரகம், சிவப்பு
மிளகாய், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக்
கொள்ளவும்.
பிறகு அரைத்தெடுத்த மசாலாக் கலவைகளை மீன் உள்ள
பாத்திரத்தில் இலேசாகத் தூவிவிட்டு, ருசிக்காகச் சிறிது உப்பையும்
சேர்க்கச் செய்து, கொஞ்சம் நெய்யையும் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எல்லாம்
முடிந்ததும், பாத்திரத்தில் சிறிதளவு கொதிக்கவிடவும்.
தண்ணீர் ஊற்றி
நன்றாக மீன்களும் கலவைகளும் வேகும்வரை கொதிக்க விடவும். வெந்து
மிருதுவானதும் பாத்திரத்தைக் கீழே இறக்கி வைக்கவும். சூடாக பரிமாறவும்.
இப்போது ருசியான மெட்ராஸ் மீன் குழம்பு ரெடி!!!