Advertisement

வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்காம கீரை கூட்டு எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?

By: vaithegi Sun, 13 Aug 2023 3:55:54 PM

வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்காம கீரை கூட்டு எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?

தினமும் ஒரு கீரை வகையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. . இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இன்று விற்கும் விலைவாசியில் கீரையை விட வெங்காயம் தக்காளி போன்றவற்றையெல்லாம் வாங்கி சமைப்பது பெரும் கவலையாக தான் இருக்கும். இப்படியான இந்த சூழ்நிலையில் இதே கீரை ரெசிபி ஹோட்டலில் கிடைப்பது போல நல்ல சுவையாக வீட்டில் செய்து சாப்பிட முடியும் என இங்கு பார்ப்போம்.

கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:

கீரை – 1 கட்டு, பச்சைப்பயிறு – 1/4 கப், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், தனியாத் தூள் -1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை விளக்கம்:

இப்போது இந்த கீரையை செய்ய ஆரம்பித்து விடலாம். அதற்கு முதலில் கீரையை சுத்தம் செய்து அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது குக்கரில் எடுத்து வைத்திருக்கும் பருப்பை 1 முறை தண்ணீரில் அலசிய பிறகு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வரும் வரை விட்டு அடுத்து அணைத்து விடுங்கள்.

combine spinach,onion,tomato ,கீரை கூட்டு,வெங்காயம், தக்காளி

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் சுத்தம் செய்து வைத்த கீரையை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையை சேர்த்த பிறகு பச்சை மிளகாய், பூண்டையும் பொடியாக அரிந்து அதில் சேர்த்த பிறகு லேசாக கலந்து விடுங்கள் கீரை ஓரளவிற்கு வெந்த பிறகு தனியா தூள் சீரகத்துள் உப்பு சேர்த்து மீண்டும் 1 முறை கலந்து வேக விடுங்கள்.

இப்படி இரண்டு நிமிடம் வெந்தாலே போதும். அதன் பிறகு ஏற்கனவே வேக வைத்த பருப்பை லேசாக கடைந்து, பருப்பு முழுவதுமாக மசிந்து விடாமல் இருக்க வேண்டும். அதையும் இந்த கீரையில் சேர்த்து 1முறை கலந்து கொதிக்க விடுங்கள். இது ஒரு புறம் கொதித்துக் கொண்டே இருக்கட்டும். அடுத்த அடுப்பில் ஒரு சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன் சேர்த்து பொரிந்த பிறகு 1 காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்த பிறகு அடுத்து அணைத்து விடுங்கள். இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் கீரை கூட்டில் கலந்து பின் அடுப்பை அணைத்து விடுங்கள் மிகவும் சுவையான கீரை கூட்டு தயார்.

Tags :
|