Advertisement

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கேரட் தக்காளி சூப்

By: Nagaraj Wed, 02 Nov 2022 4:01:12 PM

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கேரட் தக்காளி சூப்

சென்னை: உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கிறது கேரட். முக்கியமாக கண் பார்வைக்கு மிகவும் நல்லது கேரட். அந்த கேரட் மற்றும் தக்காளியில் சூப் வைத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


தேவையானவை:- காரட் - 1, தக்காளி - 2, பெரிய வெங்காயம் - 1, உப்பு - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், வெண்ணெய் அல்லது க்ரீம் - ஒரு டீஸ்பூன் விரும்பினால்

carrot tomato soup,carrot tomato soup recipe,recipe,recipe in tamil ,கேரட், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், வெண்ணெய்

செய்முறை:- காரட், வெங்காயத்தைத் தோலுரித்துத் துண்டுகள் செய்து தக்காளியுடன் குக்கரில் இரண்டு கப் நீரூற்றி வேகப்போடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறி வைக்க வேண்டும்.

பின்னர் நீரில்லாமல் எடுத்து மிக்ஸியில் போட்டு மசிக்கவும். திரும்ப அதே நீரில் அரைத்ததை வழித்து ஊற்றிக் கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கலந்து அருந்தக் கொடுக்கவும். மிகவும் அருமையான, ஆரோக்கியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Tags :
|