Advertisement

எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும் கேழ்வரகு உணவுகள்

By: Nagaraj Tue, 07 June 2022 10:13:52 AM

எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும் கேழ்வரகு உணவுகள்

சென்னை: கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கேழ்வரகு உணவுகள் உதவுகிறது.

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - ஒரு கப், நாட்டு சர்க்கரை - ஓர் உழக்கு, நெய் - தேவையான அளவு, ஏலக்காய் - 5, முந்திரி - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

sugar,cashews,cardamom,coconut flour,pudding ,நாட்டுச்சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், தேங்காய்த்துருவல், புட்டு

செய்முறை: நெய்யில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவைச் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஊறவைக்கவும்.

சிறிது நேரம் கழித்து மாவைக் கட்டியில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். நன்றாக வெந்தபின் தட்டில் கொட்டி கட்டியில்லாமல் உதிர்க்கவும். பிறகு, நாட்டு சர்க்கரையைக் கலந்து வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும். சத்தான சுவையான கேப்பை புட்டு ரெடி.

Tags :
|