Advertisement

மொறு மொறுப்பாக அசத்தல் சுவையில் காலிபிளவர் ப்ரை செய்முறை

By: Nagaraj Sun, 20 Dec 2020 7:15:10 PM

மொறு மொறுப்பாக அசத்தல் சுவையில் காலிபிளவர் ப்ரை செய்முறை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலிபிளவர் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலிபிளவர் ப்ரை சுவையான முறையில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:


காலிபிளவர் - 1,
மைதா மாவு - 50 கிராம்,
கார்ன் ப்ளார் - 25 கிராம்,
அரிசி மாவு - 1 தேக்கரண்டி ,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
சிவப்பு புட் கலர் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

cauliflower fry,arisema,ginger garlic paste,chili powder ,காலிபிளவர் ப்ரை, அரிசிமாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்


செய்முறை: முதலில் காலிபிளவரை நன்றாக கழுவி பூவாக பிரித்தெடுத்துக்கவும். பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் கொதித்தவுடன் அதில் காலிபிளவரை போட்டு அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும். தொடர்ந்து மைதா மாவு, கார்ன் ப்ளோர், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு புட் கலர், மிளகாய் தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து அதனுடன் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து அதில் காலிபிளவரை போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.

தொடர்ந்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும். அதையடுத்து இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். அதன்பிறகு மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.

இதில் எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். இப்போது டேஸ்டான காலி பிளவர் ப்ரை தயார்.

Tags :