Advertisement

காலிபிளவர் பட்டாணி மசாலா செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 01 Oct 2022 7:04:35 PM

காலிபிளவர் பட்டாணி மசாலா செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: காலிபிளவர் பட்டாணி மசாலா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் பாராட்டுக்களை பெறுங்கள்.

தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் பூ - 1 சிறியதுபச்சைபட்டாணி - 100 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்தக்காளி - 3இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டிமல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டிமிளகாய்தூள் - 1 தேக்கரண்டிமுந்திரி - 6சோம்பு - 1/2 தேக்கரண்டிகசகசா - 1/2 தேக்கரண்டிபட்டை - 2 (1/2 இன்ச் அளவு)கிராம்பு - 4சீரகம் - 1/2 தேக்கரண்டிமிளகுதூள் - 1/2 தேக்கரண்டிஎண்ணெய் - 2 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1 சிட்டிகைகறிவேப்பிலை - 1 கொத்துஉப்பு - தேவையான அளவு

cashew,anise,poppy seed,cumin,cauliflower,green peas ,முந்திரி, சோம்பு, கசகசா, சீரகம், காலிபிவர், பச்சைப்பட்டாணி

செய்முறை:காலிபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 3 நிமிடம் கழித்து வடிதட்டில் வடித்து எடுத்துக் வைக்கவும். பச்சை பட்டாணியை தனியே வேகவைத்துக் கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரி, சோம்பு, கசகசா, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்குமளவு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். காலிஃபிளவர், பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த முந்திரி சீரக விழுது சேர்த்து, காய் மூழ்கும் அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து காய் குழையும் வரை நன்கு வேக விடவும். காய் வெந்து குழம்பு நன்கு சுண்டியவுடன் மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

Tags :
|
|
|