Advertisement

சூப்பர் சுவையில் சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு செய்முறை

By: Nagaraj Fri, 16 Sept 2022 11:32:17 PM

சூப்பர் சுவையில் சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு செய்முறை

சென்னை: ஆஹா என்ன சுவை என்று சப்புக்கொட்டி உங்கள் குடும்பத்தினர் சாப்பிட சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்கு கால் கிலோ, பெரிய வெங்காயம் இரண்டு, தக்காளி இரண்டு, பச்சைமிளகாய் இரண்டு, இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன் ,தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு, கொத்து உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு ,சோம்பு அரை டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு.

tomatoes,curry leaves,yams,coriander leaves,ginger,garlic ,தக்காளி, கறிவேப்பிலை, சேப்பங்கிழங்கு, கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு

செய்முறை: முதலில் சேப்பங்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய கிழங்கை போட்டு நன்கு சிவக்க வறுக்க வேண்டும். பிறகு சோம்பை சேர்த்து அதனை தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி, கறிவேப்பிலையை போட்டு தொடர்ந்து எல்லாத்தூளையும் போட்டு உப்பைத் தூவி நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு ஒரு கப் தண்ணீரை ஊற்றி மூடியைப் போட்டு அனலைக் குறைத்து வைத்து வேகவிட வேண்டும்.கிழங்கு நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தழையைத் தூவி நன்கு கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். இப்போது சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு ரெடி ஆகி விடும்.

Tags :
|
|