Advertisement

வீட்டிலேயே சூப்பராக செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா

By: Nagaraj Mon, 25 July 2022 2:30:24 PM

வீட்டிலேயே சூப்பராக செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா

சென்னை: இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். ரமலான் நோன்பு காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ; வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்; மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்; தயிர் – 2 டேபிள் ஸ்பூன்; பச்சை ஏலக்காய் – 4 ; இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்; சீரகப் பொடி – 2 டீஸ்பூன்; பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது); எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்; எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்; உப்பு – தேவையான அளவு; துருவிய சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

chicken malay tikka,butter,green chillies,cardamom,cheese ,சிக்கன் மலாய் டிக்கா, வெண்ணைய், பச்சை மிளகாய், ஏலக்காய், சீஸ்

செய்முறை:மட்டன் மசாலா முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பின்பு பிளெண்டரில்/மிக்ஸியில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி வெண்ணெய், க்ரீம், சீரகப் பொடி, ஏலக்காய், பச்சை மிளகாய், சீஸ் ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, க்ரில் கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி, நெருப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும்.
அப்படி சுடும் போது வெண்ணெயை அவ்வப்போது தடவி சுட வேண்டும். இப்படி அனைத்து சிக்கன் துண்டுகளையும் சுட்டு எடுத்தால், சிக்கன் மலாய் டிக்கா ரெடி!!!

Tags :
|