Advertisement

சப்புக்கொட்டி சாப்பிடும் சுவையில் சிக்கன் பார்சா செய்முறை

By: Nagaraj Sun, 20 Dec 2020 5:58:06 PM

சப்புக்கொட்டி சாப்பிடும் சுவையில் சிக்கன் பார்சா செய்முறை

சிக்கன் பார்சாவினை பொதுவாக நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட்டு வருகிறோம், அந்த பார்சாவை நாம் வீட்டிலேயே சுவையான முறையில் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

சிக்கன் - கால் கிலோ
முட்டை - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பிரெட் தூள் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

chicken parsley,eggs,bread crumbs,chili powder ,சிக்கன் பார்சா, முட்டை, பிரெட் தூள், மிளகாய் தூள்

செய்முறை: சிக்கனை வெட்டி ஒரு பாத்திரத்தில் பூண்டு இஞ்சி பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிக்கனை எடுத்து பிரெட் தூள் மற்றும் முட்டையில் தொட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தால் சிக்கன் பார்சா ரெடி.

Tags :
|