Advertisement

கடலைப்பருப்பு முட்டை தோசை செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 23 Sept 2022 09:59:42 AM

கடலைப்பருப்பு முட்டை தோசை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பை வைத்து எப்படி முட்டை தோசை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு

பொட்டுக்கடலை

முட்டை

வெங்காயம்

பச்சை மிளகாய்

பச்சை அரிசி

உப்பு

chickpeas,chickpeas,eggs,onions ,கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, முட்டை, வெங்காயம்

பச்சை மிளகாய்

செய்முறை: அரைக்க : முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் அரிசியுடன், பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

கலவை : அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், முட்டை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

தோசை : தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், இந்த தோசை மாவு கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான கடலை பருப்பு முட்டை தோசை தயார். இதனை காரச் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள்

Tags :
|