Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் துவரம் பருப்பு கடைதல்

By: Nagaraj Mon, 19 Sept 2022 8:32:05 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் துவரம் பருப்பு கடைதல்

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் துவரம் பருப்பு கடைதல் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

துவரம் பருப்பு கடைதல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. மதிய சாப்பாட்டில் முதல் உணவாக இந்த பருப்பு கடைதல் சாப்பிடுவர். துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.


தேவையானவை:

துவரம் பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 1
கடுகு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

duvaram dal,mustard,dry chillies,amaranth,oil ,துவரம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், எண்ணெய்

செய்முறை: துவரம் பருப்பை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். குக்கரில் கழுவிய துவரம் பருப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும். பருப்பு வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தை எண்ணெயை தாளித்து பருப்பு வைத்திருக்கும் பாத்திரத்தில் போடவும். இறுதியாக உப்பை போட்டு நன்றாக கலக்கவும். சுட சுட சாதத்தில் இந்த பருப்பு கடைதல் போட்டு, நெய் ஊற்றி நன்றாக பிசைந்து, அப்பளத்தோடு சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.

Tags :