Advertisement

அனைவரும் விரும்பி சாப்பிடும் சில்லி முட்டை மசாலா!

By: Monisha Sun, 01 Nov 2020 4:13:00 PM

அனைவரும் விரும்பி சாப்பிடும் சில்லி முட்டை மசாலா!

முட்டையை கொண்டு வித்தியாசமான முறையில் பல உணவுகளை தயாரிக்கலாம். இந்த பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடும் சில்லி முட்டை மசாலாவை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை – 2
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
கிராம்பு – 2
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
புளிக்கரைசல் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

eggs,chili egg spices,ginger,garlic ,முட்டை,சில்லி முட்டை மசாலா,இஞ்சி, பூண்டு

செய்முறை
முதலாவது முட்டையை வேக வைத்து விடுங்கள். அதன்பின் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது முட்டை வெந்திருக்கும். அதன்பின் முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

இது தயார் ஆனதும் குழம்பு செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கிதும் காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு சில நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.

பின்னர் அதில் புளிக்கரைசல், சோயா சாஸ், உப்பு போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். இது ரெடி ஆனதும் இரண்டாக நறுக்கிய முட்டையை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி கொள்ள வேண்டும். சுவையான சில்லி முட்டை மசாலா தயார்.

Tags :
|
|